கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருவதாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை நாகை துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசால் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்கள் இதுவரை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
புயலால் பாதிப்படைந்த வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் ECS மூலம் பொதுமக்களின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை வரவு வைக்கபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.