அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வரும் நிவாரணப் பொருட்களை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வை

நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வரும் நிவாரணப் பொருட்களை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாகையின் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள அகரகடமனூர் பகுதியில் அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வரும் நிவாரணப் பொருட்கைள அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்க நிவாரணப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

 

Exit mobile version