திருவள்ளூரில் தமிழக அரசால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண பொருட்கள் காலாவதியாகி இருப்பது அம்பலமாகி உள்ளது.
கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் நியாய விலை கடையில் தமிழக அரசால் வழங்கப்படும் 14 வகையான உணவு பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
அவ்வாறு வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் காலவாதியாகி இருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு வழங்கும் பொருட்களில் திமுகவினர் ஊழல் செய்து இருப்பது கிராமத்து இளைஞர்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முதல்வரின் தனி பிரிவிற்கு டுவிட்டரில் பதிவிட்டும் இதுவரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காதால் அப்பகுதி பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஊழலுக்கு பெயர்போன திமுகவினர் அத்தியாவசிய பொருட்களான ரேஷன் பொருட்களிலும் தங்கள் கை வரிசை காட்டி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.