ஞாயிறன்று தளர்வில்லா முழு ஊரடங்கு!

தமிழகம் முழுவதும் ஞாயிறன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், சென்னையில் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தளர்வில்லா முழு ஊரடங்கு, திங்கள் கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும். தளர்வில்லா முழு ஊரடங்கின் போது, பால் விநியோகம் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியமின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version