கட்டுமானப் பொருட்கள்,பணியாளர்களின் ஊதியத்துக்கான புதிய பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்துக்கான புதிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு மெட்ரிக் டன் ஸ்டீல் 45 ஆயிரம் ரூபாய் எனவும், ஒரு மெட்ரிக் டன் சிமெண்ட் ரூபாய் 5,750 எனவும், 1000 செங்கலின் விலை ரூபாய் 7,435 எனவும், எம்.சாண்ட் யூனிட் ரூபாய் 1,250 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படித்த தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான ஒருநாள் ஊதியமாக 837 ரூபாயாகவும், கட்டுமான பொறியியல் படித்த தொழில்நுட்ப உதவியாளரின் ஒரு நாள் ஊதியம் ரூபாய் 638 ஆகவும்,கார்பெண்டருக்கு ரூபாய் 638, கொத்தனாருக்கு ரூபாய் 652 முதல் 920 வரை எனவும் படிநிலைக்கு ஏற்றார் போல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புதிய விலைப்பட்டியல் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை வைத்தே கட்டுமானப் பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version