கொரோனா பரிசோதனை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி, பிரசவம் உள்ளிட்ட அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனை குறித்து ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில், தனிநபர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் எனவும், வெளிநாடு, வெளிமாநில பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, தொற்று இல்லை என்றால் மட்டுமே பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை வசதி இல்லை எனக் கூறி, பிரசவம் உள்ளிட்ட அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ள ஐ.சி.எம்.ஆர், தாய்க்கு கொரோனா இருந்தால், முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து பின்னர் குழந்தையை தூக்கலாம் எனவும் தெரிவித்தது. மேலும், அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பவர்கள், அதற்கு முன் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version