கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த உத்தரவுகளை, அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் காண்காணிப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தொளிக்கவும் அரசாணையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.