அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால், பெண் இறந்ததாக கூறி, அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால், பெண் இறந்ததாக கூறி, அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.

குன்னம்பாறை பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மூச்சு திணறலால் அவதியடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், ரேவதிக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், அவரது உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனவும் கூறி உறவினர்கள் 4 நாட்களாக உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்

Exit mobile version