தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட குக்கர் சின்னம் கேட்டு தினகரன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், குக்கர் சின்னம் பொதுவாக சின்னம் என்பதால், தினகரன் கட்சிக்கு அதை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்று தெரிவித்தது.
தேர்தல் நேரத்தில் தினகரன் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும் எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.