ராமேஸ்வரத்தில் கடலோர பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்த ஒத்திகை

ராமேஸ்வரத்தில் கடலோர காவல் கண்காணிப்பு குழு சார்பில் ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட சுற்றுவட்டார கடற்பகுதிகளில் ஆபரேஷன் சாகர் கவாசின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர், பாம்பன் பாலம் அருகே சந்கேத்திற்கு இடமாக நாட்டுப்படகில் இருந்த 13 மீனவர்களிடம் சோதனை நடத்தினர். அவர்கள் முறையான அனுமதி பெறாமல் மீன் பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரோந்து பணியல் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் படையினர் அனுமதி இன்றி மீன் பிடித்தவர்களை எச்சரித்து அனுப்பினர். கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் அவ்வப்போது இது போன்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version