யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் இளைஞர்கள்

நாமக்கல் அருகே பல்வேறு தரப்பினரால் கைவிடப்பட்டு யாசகர்களாகும் நபர்களுக்கு, இளைஞர்கள் சிலர் முடிதிருத்தம் செய்து, உரிய காப்பகங்களில் சேர்த்து வருவது காண்போர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டத்தைச் சுற்றி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், உறவுகளால் கைவிடப்பட்டநிலையிலும், சிலர் பிச்சை எடுத்து வந்தனர். அந்த நபர்களை வார இறுதிநாட்களில், குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் கண்டுபிடித்து, முடிதிருத்தம் செய்து, குளிக்க வைக்கின்றனர். பின்னர், அந்த யாசகர்களுக்கு புத்தாடை அணிவித்து, உரிய காப்பகங்களில் கொண்டுபோய் அக்குழுவினர் சேர்க்கின்றனர். இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாசகர்களின் தகவல்களை சேகரித்து, அவர்களை அவர்களது இல்லங்களிலோ அல்லது காப்பகங்களிலோ சேர்த்துள்ளனர். இளைஞர்களின் சமூகசேவை நாமக்கல் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version