சாலை விபத்தில் இரு கால்களும் செயலிழந்து எட்டு வருடங்களாக வீட்டில் அவதியுற்று வந்த வாலிபர் ஒருவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா இருசக்கர வாகனம் மூலம் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் வெங்கடேசன், இவர் திருமணம் ஆகி மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது அவர் பயணித்த இரு சக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் வெங்கடேசனின் கால் செயலிழந்தது போனது, எவ்வளவு செலவு செய்தும் செயலிழந்த காலினை சரி செய்யமுடியாமல் அவதிப்பட்டார் அவரின் மனைவி, மேலும் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் வாட்ட வாழ்க்கையில் எதாவது செய்து குடும்பத்தை காப்பற்ற நினைத்தார் வெங்கடேசன்.இந்நிலையில் தனது விடாமுயற்சியால் பிசியோதெரபி சிகிச்சை மூலம் ஓரளவு உடல் நலம் தேறினார் .
இதனிடையே தமிழக அரசின் கடந்த ஆண்டு நிதி அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாயிரம் விலையில்ல இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தனக்கு இருசக்கர வாகனம் வழங்கக்கோரி வெங்கடேசன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அதன்பேரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 தேதி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் வெங்கடேசனுக்கு விலையில்லா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகள் வீட்டிலேயே முடங்கி இருந்த வெங்கடேசன், அரசின் இருசக்கர வாகனம் மூலம் தற்போது தனியாக வெளியிடங்களுக்கு சென்று வருகிறார்.
மேலும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி சுய தொழில் செய்ய விரும்பிய அவர், ஓசூர் நகரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு கமிஷன் அடிப்படையில் மாவு விநியோகித்து வருகிறார். மேலும் துணிப்பைகள் தயாரித்து விநியோகித்து நாள்தோறும் 200 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
இது குறித்து வெங்கடேசன் கூறுகையில்
தமிழக அரசால் வழங்கப்பட்ட இருசக்கர வாகனத்தினால் தன்னால் சுதந்திரமாக வெளியே சென்று வர முடிவதாக தெரிவிக்கும் அவர் தான் தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.