அரசுப் பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 மாவட்டங்களைத் தவிர, தமிழகம் முழுவதும் 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, தேவையான அளவு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க, Paytm மூலம் டிக்கெட் கட்டணம்  செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மண்டலம் விட்டு மண்டலம் செல்ல விரும்பும் பயணிகள், இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்றும், கன்னியாகுமரியில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், அரசுப் பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Exit mobile version