ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமையும் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும் : பத்திரப் பதிவுத்துறை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, விடுமுறை நாளான சனிக்கிழமையும் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும் என பத்திரப் பதிவுத்துறை அறிவித்துள்ளது. வரும் சனிக்கிழமை ஆடிப்பெருக்கு தினத்தில், சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணப் பதிவுகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவதால், கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அறிவிப்பு பலகை மூலமாக பொதுமக்களுக்கு விளம்பரம் செய்ய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version