பரமக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான யோகா போட்டியில் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மண்டல அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 21ம் ஆண்டு மண்டல அளவிலான யோக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. பரமக்குடி எம்எல்ஏ. சதன் பிரபாகர் போட்டிகளை துவங்கி வைத்தார். 13 வகைகளில் நடைபெற்ற யோகா போட்டியில் 4 வயது முதல் 35 வயது வரையிலான குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தபடியாக தேசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.