புதுச்சேரியில் நடைபெற்ற மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி

புதுச்சேரியில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில்  300-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். 

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி காரமாணிக்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிப்பது, பாரம்பரிய முறைப்படி நெல் குத்தும் இயந்திரம் மூலம் தரமான அரிசியை பிரிப்பது, உப்பு தண்ணீரில் இருசக்கர வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுதத்தியிருந்தனர்.

இந்த அறிவியல் கண்காட்சியை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து வரும் 21-ம் தேதி முதல் மாநில அளவிலான கண்காட்சியும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version