சாத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் புரியாத வகையிலும், தவறான தகவல்களை கூறியும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது அனைவரிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அயன் சத்திரப்பட்டியில் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த திமுக பெண் உறுப்பினர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், புரியாத வகையிலும், தவறான தகவல்களை கூறி உளறியது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் மறைவால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில், சாமி மறைந்ததால் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தவறான தகவல்களை ஸ்டாலின் பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் மொத்தமாக கூடியிருந்தால் கைகலப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். பெண்கள் குறித்த ஸ்டாலினின் இந்த மாறுபட்ட மற்றும் அவதூறான கருத்தால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தன்னைத்தானே தளபதி என்றும் அவர் பெருமிதமாக கூறினார். மொத்தத்தில் ஸ்டாலின் பங்கேற்கும் கிராமச்சபை கூட்டங்கள், குழப்பத்துடனும், சலசலப்புடனும் நடைபெறுவதாகவே கூறப்படுகிறது.