"புத்துயிர் பெறும் சாலையோர நடைபாதைகள்"

சென்னையில் வெளிநாடுகளுக்கு இணையாக நடைபாதைகள் மாற்றம் பெற்று வருகின்றன. இதனால், பாதசாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்…

வந்தாரை வாழவைக்கும் சிங்காரச் சென்னை நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள இங்கு தார் சாலைகளுக்கு இணையாக நடைபாதைகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அந்த வகையில், சென்னை, மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபாதைகள் புதிதாக கற்கள் பதிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றன.

ஏழைகளின் வீடாகவும், உடற் பயிற்சியாளர்களின் கூடமாகவும் விளங்கும் இந்த நடை பாதைகள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, அதிநவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இது மட்டுமின்றி, நடைபாதைகளை சுற்றி பூந்தோட்டங்களும், இருக்கைகளும் நிறுவப்பட்டுள்ளன. இதனை தகுந்தார் போல் பரமாரிக்க நகராட்சி சார்பில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பார்வைத் திறன் குன்றியவர்கள் பாதுகாப்புடன் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதைகள், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை உடற்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் காற்றை சுவாசிக்கத் தரும், மரக்கன்றுகளும் நடை பாதைகளின் ஓரங்களில் வளர்க்கப்படுகின்றன. இவை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரது மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Exit mobile version