மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கி பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்து மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.