பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

27 பொதுத்துறை வங்கிகளில் சில இணைக்கப்பட்டுள்ளதால், பொதுத்துறை வங்கிகள் 12ஆக செயல்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைட்டைட் வங்கி மற்றும் ஓரியண்டல் வங்கி மூன்றும் இணைக்கப்பட்டு நாட்டின் 2வது பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படும் என்று குறிப்பிட்டார்.

இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டு நாட்டின் 7வது பெரிய வங்கியாக செயல்படும் என்றும், கனரா வங்கியும் சிண்டிகேட் வங்கியும் ஒன்றாக இணைக்கப்பட்டு செயல்படும் என்றும் அவர் கூறினார்.

யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி, கார்பரேஷன் வங்கி ஆகிய 3 வங்கிகள் இணைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகள் இணைப்பதால் ஊழியர்கள் யாரும் பணியில் இருந்து நீக்கப்படமாட்டார்கள் என குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளின் லாபத்தன்மை நிதியாண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், சர்வதேச வங்களுக்கிடையேயான நிதி தகவல் தொடர்பு அமைப்புடன் வங்கிகள் இணைக்கப்படுவதாகவும், 27 பொதுத் துறை வங்கிகளில் சிலவற்றை இணைக்கும் நடவடிக்கையால் மொத்த பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக குறைந்துள்ளது. வங்களின் மொத்த கடன் வசூல் 1 லட்சத்து 20 கோடி ரூபாயை தொட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version