கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து 8 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவும் 8 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 47-வது நாளாக அருவியில் குளிக்கவும், 19-வது நாளாக பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version