கோவையில் உள்ள பில்லூர் அணையின் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியிலிருந்து 8 ஆயிரம் கன அடியாக குறைந்ததையடுத்து, திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், பில்லூர் அணையின் நீர்மட்டம் மூன்றாவது நாலாக நிரம்பியது. இந்த நிலையில், அணையின் முழுகொள்ளவான 100 அடியில் இருந்து 97 அடியாக உயர்ந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் உபரி நீர் 15ஆயிரம் கன அடிவரை வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தநிலையில், காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 8 ஆயிரம் கன அடியாக குறைந்ததையடுத்து அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதுவரை 4 மதகுகளில் வெளியேற்றப்பட்டு வந்த நீரானது தற்போது 2 மதகுகளாக திறக்கப்பட்டுள்ளது.