ரெப்போ வட்டி விகிதம் 4வது முறையாக குறைப்பு

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35% குறைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் அதன் தலைவர் சக்தி காந்த தாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.75%ல் இருந்து 35 புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.40% ஆக உள்ளது. 9 வருடங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சதவீதம் முன்பு கணிக்கப்பட்ட 7 % இருந்து 6.9% குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீடு, வாகனங்கள், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில், 4-வது முறையாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version