வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த நிலையில், மீண்டும் 0.25 சதவீதம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6 சவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியால் வணிக வங்கிளுக்கு பணம் தேவைப்படும் போது கடன் அளிக்கக்கூடிய வட்டி விகிதம் ஆகும். மும்பையில் நடைபெற்ற நாணய குழு க்கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.