வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிகளை குறைக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி

வங்கிகள் மூலம் பெறப்பட்ட தனி நபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கு, உடனடியாக வட்டியைக் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டியை, வங்கிகள் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவின்படி, பல்வேறு காரணங்களால் வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைப்பதில் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை எனவும், வங்கிகள் தற்போது உள்ள வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் சிறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் பெற்றவர்களுக்கு, உடனடியாக வட்டியை குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Exit mobile version