விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் ரெட்மி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக ‘ரெட்மி 9’ ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இது வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அப்டேட்டுகள் நிறைந்ததாகவும் இருக்கும் என தெரிவித்திருந்தது.
சமீபத்தில் ரெட்மி ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் பிராசஸருக்கு பதிலாக மீடியாடெக் பிராசஸர்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இதற்கு முன்னாள் வெளியான ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனில் முதல் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் பொருத்தப்பட்டது.
அதேபோல் ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி70 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 6.7 inch display, 4 GB Ram, 64 GB Rom, 5000MAH பேட்டரி, கைரேகை சென்சார் போன்ற சிறப்பம்சங்களுடன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.