எல்லைக்கோடு பகுதிகளில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், ரெட் அலர்ட் எனப்படும் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், எல்லைப்பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சீன ட்ரோன்கள் மூலம், இந்தியாவின் பஞ்சாப்பிற்குள் ஆயுதங்களை பாகிஸ்தான் கடத்தி வந்தது சமீபத்தில் தெரியவந்தது. இதனையடுத்து வான் வழியாக ஊடுருவும் பாகிஸ்தானின் முயற்சியை முறியடிக்க, தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச எல்லைகள், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய ஜம்மு, சம்பா, கத்துவா, ரஜவுரி, பூஞ்ச், பாராமுல்லா, குப்புவாரா மாவட்டங்களில் படைகள் அதிகம் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லைகளை ஒட்டிய நீர்வழிகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய வான் எல்லைக்குள் எந்தவித ட்ரோன் பறந்தாலும் சுட்டு வீழ்த்தும் படி ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version