தொடர் மழை காரணமாக மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’

தொடரும் கனமழை காரணமாக மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. குஜராத், பீகாரிலும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இதுவரை இல்லாத அளவிற்கு கன மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதே போல் மும்பையின் சியோன், வடாலா ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை காரணமாக ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தொடர் மழை காரணமாக மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்வதால். தாழ்வான பகுதிகளில் நீரால் சூழப்பட்டுள்ளன. அதே போன்று குஜராத் மற்றும் பீகாரில் கனமழை பெய்து வருகிறது. குஜராத்தின் மேந்தர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டனர்.

Exit mobile version