புயல் காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழை பெய்ய கூடும் என்பதால், மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழுவு பகுதி புயலாக மாறக்கூடும் என்பதால், நீலகிரி மாவட்டத்தில் வெள்ளி முதல் மூன்று நாட்களுக்கு அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கூடுதல் எச்சரிக்கையாக மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும், மழை பெய்யும் போது மரத்தின் கீழ் யாரும் நிற்க கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.