கேரள மாநிலத்தின் சில மாவட்டங்களுக்கு ஜூலை 22 ஆம் தேதி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது
கோழிக்கோடு இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. மேலும் மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களிம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தின் எட்டுமனூர்-பீருமேடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் மழையின் காரணமாக பம்பா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ஜூலை 22 ஆம் தேதி வரை இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டங்களில் 20 செண்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.