கேரளாவில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் அம்மாநிலத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
கேரளாவில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழையின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. கன மழையால், ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம், மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அம்மாவட்டங்களுக்கு ’ரெட் அல்ர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.