பீகார் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

பீகாரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் இதுவரை 42 பேர் பலியான நிலையில், மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக 16 மாவட்டங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. குறிப்பாகத் தலைநகர் பாட்னாவும் அதையொட்டிய பகுதிகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளதாகவும், வெள்ளத்தால் சுமார் 17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. பாட்னாவில் கடந்த சில நாட்களாக மின்சாரம் தடைபட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பீகார் மாநிலத்தின், பாட்னா, வைஷாலி, பெகு சராய், ககாரியா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version