நாமக்கல் மாவட்டத்திலுள்ள சரபங்கா மற்றும் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால்களில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சரபங்கா வடிநில கோட்டப் பகுதிகளில் 5.17 கோடி ரூபாய் மதிப்பில் 14 பணிகளும், மேட்டூர் அணை கோட்டப் பகுதிகளில் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில் 5 பணிகள் மேற்கொள்ளவும், தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரை புனரமைத்தல், மதகு புனரமைத்தல், கலிங்கு புனரமைத்தல், வாய்க்கால் புனரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கோள்ளப்பட்டன. குடிமராமத்து திட்டத்தால் தங்களுக்கு பாசனத்திற்கு தேவையான நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.