கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்-முதலமைச்சர் குமாரசாமி

கர்நாடக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அதிரடியாக பதிலளித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்ளும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்த 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் இந்த ராஜினாமா கடிதங்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்தான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை வரை எந்தவொருநடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவையில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என அதிரடியாக அறிவித்தார்.

Exit mobile version