“விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்”

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன், பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை கவனத்துடன் கேட்டு, வேளாண் சட்டங்கள் குறித்த தவறான எண்ணங்களை அகற்ற மத்திய அரசு தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுடன், திறந்த மனதுடன் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், உறுதியளித்தார். வேளாண் துறையை பின்நோக்கி கொண்டுசெல்லும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காது என குறிப்பிட்டார்.

 

Exit mobile version