இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக் கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சனையை அமெரிக்க அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், டொனால்ட் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இருநாடுகளுக்கிடையே ஏற்படும் பதற்றம் தெற்காசிய அமைதியை பாதிக்கும் எனவும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
பிரான்சில் நடைபெறவுள்ள மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீட்டை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் காஷ்மீர் விவாகரம் எழுப்பப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.