எந்நேரமும் தாக்குலுக்கு தயார் – இந்திய விமானப்படை தளபதி தனோவா

எந்நேரமும் தாக்குலுக்கு தயார் நிலையில் இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் மரணமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்திய விமானப்படை மிகப்பெரிய ஒத்திகையில் ஈடுபட்டது. “வாயு சக்தி” என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், 140 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. ஒத்திகை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா நம்முடைய அரசு உறுதியளித்துள்ளபடி, எந்தநேரத்திலும் தகுந்த பதிலடி கொடுப்பதற்காக இந்திய விமானப்படை தயாராகி வருகிறது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்திலும், இறையாண்மையை காப்பதிலும் இந்திய விமானப்படை தகுதியுடன் இருக்கிறது என்று தெரிவித்தார்.

Exit mobile version