உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் சீல்

உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்து உள்ள உதகை மண்சரிவு மற்றும் நிலச்சரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 7 மீட்டர் உயரம் மற்றும் 30 டிகிரி சரிவுக்கு மேல் இருக்கும் இடங்களில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று விதிமுறைகள் உள்ளன.

ஆனால், அதை மீறிய கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. இதனால், விதிகளை மீறி கட்டிடங்களை கட்டியவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version