புதுச்சேரியில் காமராஜ் நகரில் மறு வாக்குப்பதிவு

புதுச்சேரியில் ஒரு வாக்குசாவடியில் மட்டும் வரும் 12ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் காமராஜ் நகருக்குட்பட்ட 10 ஆம் எண் வாக்கு சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தை நீக்காமல் வாக்குப்பதிவு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து மறு வாக்குப்பதிவு நடத்தபடும் என தேர்தல் அதிகாரி அருண் அறிவித்துள்ளார்.

எனவே காமராஜ் நகர் 10 ஆம் எண் வாக்குச்சாவடியில் வரும் 12 ஆம் தேதி காலை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Exit mobile version