கோத்தகிரியில் 17 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 17 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அரசு பள்ளி அப்பகுதி மக்களின் முயற்சியால் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பலரும் தங்களது குழந்தைகளை அப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தீம்பட்டி கிராமத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்த நிலையில், ஆங்கில மோகத்தின் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ந்தனர். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை அடுத்து, 2002ம் ஆண்டு பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் சீரிய முயற்சியால் 17 ஆண்டுகளுக்கு பிறகு அப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது ஆங்கில வழி கல்வியாக 40 மாணவ,மாணவிகளுடன் திறக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், பெற்றோர் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Exit mobile version