வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தையார் மறைவு

வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தையார் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தந்தையை இழந்து வாடும் ஆர்.பி.உதயகுமாருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version