இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய பேடிஎம் (PAYTM) பேமெண்ட்ஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி, கட்டணம் மற்றும் தீர்வு அமைப்பு சட்டம், 2007 பிரிவு 26-ன் கீழ் இறுதி அங்கீகார சான்றிதழ் வழங்க பேடிஎம் பேமெண்ட் வங்கி சமர்ப்பித்த தகவல்கள் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்பதன் அடிப்படையில், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விசாரணையின் போது, எழுத்தாலும், வாய்மொழியாகவும் கூறப்படும் பதில்களை மதிப்பாய்வு செய்த பிறகு அபராதம் விதிக்கும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.