மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்குவது குறித்து ரவீந்திரநாத் குமார் எம்.பி. கேள்வி

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசுக்கு ஏதேனும் யோசனை உள்ளதா என தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய ரவீந்திரநாத் குமார், 2020ம் ஆண்டுக்குள் தமிழகம் உட்பட 21 இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பூஜ்ஜியம் அளவை எட்டும் என்று நிதி ஆயோக் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசுக்கு ஏதேனும் யோசனை உள்ளதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நீர் மற்றும் விவசாயம் ஆகியவை மாநில அரசின் பட்டியலில் வருவதால், இது போன்ற முயற்சிகளை மாநில அரசுகளே எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Exit mobile version