மலைவாழ் மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் வாகனத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜவ்வாது மலையில் 262-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்குவதற்காக, 17 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வாகனம் ஒன்றை முதலமைச்சர் வழங்கினார். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மலைவாழ் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க புறப்பட்ட வாகனத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version