ராதாபுரம் தேர்தல் வழக்கின் இறுதி விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராதாபுரம் தொகுதியின் சட்டபேரவை தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டபேரவை மறு வாக்குப்பதிவின் முடிவுகளை வெளியிட உச்சநீதி மன்றம் தடை விதித்திருந்தது. இதனை தொடர்ந்து, ராதாபுரம் தேர்தல் தொடர்பான வழக்கின், இறுதி விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், டிசம்பர் 11 ஆம் தேதி வரை, ராதாபுரம் தேர்தலின் மறுவாக்குப்பதிவு முடிவை வெளியிட இடைக்கால தடை நீட்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.