சிந்துபாத் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து வருகின்ற படம் ‘சங்கத்தமிழன்’. இந்தப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் , விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா சேதுபதி நடித்துள்ளார் என்ற சில முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளது. மேலும் படம் தீபாவளி வெளியீடாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் விஜய் சந்தர் வாலு’, ‘ஸ்கெட்ச்’ படங்களை தொடர்ந்து இயக்கியுள்ளார். விவேக் – மெர்வின் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் இந்த படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விஜய் சேதுபதியுடன் எடுத்தப் புகைப்படத்தை நடிகை ராஷி கண்ணா “தனக்கு பிடித்த நடிகர்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ‘லாபம்’, ‘மாமனிதன்’, முத்தையா முரளிதரனின் பயோபிக், ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட திரைப்படங்கள் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
And it’s a wrap for #sangatamizhan Such an honour to have worked with my favourite @VijaySethuOffl sir ????
The customary wrap up pictures ?@sooriofficial @vijayfilmaker pic.twitter.com/Gx8ThbBwck— Raashi Khanna (@RaashiKhanna) August 1, 2019