தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட, அரியவகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த, சென்னையைச் சேர்ந்த இப்ராகீம் ஷா என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவரது உடைமையில், கொடிய விஷமுடைய சிலந்தி, மரப்பல்லி, பச்சோந்தி, பலைவனத்தில் வசிக்கக்கூடிய காட்டு எலி போன்ற 13 அரியவகை உயிரினங்கள் இருந்தன. அவற்றால் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் இந்தியாவில் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அவற்றை மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான செலவை, அவரிடமே வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.