ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது

பிரான்ஸ் தலைநாகர் பாரிசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இந்திய விமானப் படைக்கு, அதிநவீன ரஃபேல் ரக விமானங்களை வாங்க, ஐரோப்பிய நாடான, பிரான்சின், ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ரஃபேல் விமானம் ஒப்படைக்கப்பட்டது. முதல் கட்டமாக, 4 ரஃபேல் போர் விமானங்களை ராஜ்நாத் சிங் பெற்றுகொண்ட நிலையில், விமானங்கள் ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.

Exit mobile version