சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவியை, அந்த குடியிருப்பின் லிப்ட் ஊழியர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என பலர் 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து 24 பேர்களை விசாரணை வளையத்தில் கொண்டுவந்த போலீசார், அதில் 17 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்நிலையில் தங்கள்மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் ஒருவர் மட்டும் தன்னுடைய மனுவை வாபஸ் பெற்ற நிலையில், மற்ற 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
வழக்குப்பதிவு செய்து 30 நாட்களுக்குள் குண்டர் சட்டத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கில் காலதாமதமாக குண்டர் சட்டம் பதிவு செய்துள்ளதால் அதை ரத்து செய்வதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.