கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உம்மன் சாண்டி முதலமைச்சராக இருந்த போது சோலார் பேனல்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழலில் ஈடுபட்ட சரிதா நாயருடன் உம்மன் சாண்டி மற்றும் காங்கிரஸ் எம்.பி வேணுகோபால் ஆகியோர் தகாத உறவு வைத்துக் கொண்டதாக விசாரணை கமிஷன் குற்றம்சாட்டியது.
இதனிடையே திடீர் திருப்பமாக அவர்கள் இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சரிதா நாயர் போலீஸில் புகார் அளித்தார். இதனையடுத்து உம்மன் சாண்டி மற்றும் வேணுகோபால் ஆகியோர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து, காவல் கண்காணிப்பாளர் அப்துல் கரீம் தலைமையிலான புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.